வெயிலில் உலர்த்துவதற்காக தமது வீட்டுக்கொடியில் கழுவிக் காயவைக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் உடுப்புக்கள் இனந்தெரியாத விஷமிகளால் கிழித்து சேதப்படுத்தப்பட்ட குவிக்கப்பட்டிருந்ததாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, திங்கட்கிழமை வழமை போன்று பிற்பகலில் சுமார் 15 உடுப்புக்களைக் கழுவி தனது வந்தாறுமூலையிலுள்ள கடை மற்றும் வீட்டோடு உள்ள வளவிலுள்ள கொடியில் பிற்பகல் 4 மணியளவில் உலர விடப்பட்டன.
உலர வைக்கப்பட்டதன் பின்னர் செங்கலடிக்கு அலுவல் நிமித்தமாக வந்து பின்னர் மாலை 6.30 மணியளவில் சென்று பார்த்தபோது கொடியில் உலர்வதற்காக தொங்கவிடப்பட்ட உடுப்புக்கள் அனைத்தும் கிழித்து குவிக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு சேதமாக்கப்பட்ட உடுப்புக்களில் அதிகமானவை புத்தம் புதியவை. இது நாசகார விஷமிகளின் சதி வேலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
வந்தாறுமூலைப் பிரதேசத்தில் இவ்வாறு வீட்டுக் கொடிகளில் உலர வைக்கப்படும் உடுதுணிகள் வீடுகளில் ஆளரவமில்லாத தருணம் பார்த்து விஷமிகளால் சேதமாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments:
Post a Comment