20 வருடத்துக்கு பின் தேசிய மட்ட எல்லே போட்டிக்கு களுதாவளை மகா வித்தியாலய எல்லே பெண்கள் அணி தெரிவாகியுள்ளது.
திருகோணமலை இந்துக்கல்லூரி மைதானத்தில் கடந்த 5 ஆம், 6 ஆம் திகதிகளில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பெண்களுக்கான எல்லே விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டப் பாடசாலைகள் முதல் மூன்று இடங்களையும் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
இதனடிப்படையில் முறக்கொட்டான்சேனை இராம கிருஷ்ண மிசன் மகாவித்தியாலயம், 1 ஆம் இடத்தினையும், மண்டூர் 13 ஆம் பிரிவு
விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம் 2 ஆம் இடத்தையும், களுதாவளை மகாவித்தியாலயம் 3 ஆம் இடத்தினையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதனடிப்படையில் களுதாவளை மகாவித்தியாலயம் கடந்த 20 வருடங்களுக்குப்பின் இப்போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
32 பாடசாலைகள் பங்குபற்றிய இப்போட்டி நிகழ்வில் முதல் மூன்று இடங்களையும் மட்டக்களப்பு தமிழ்ப் பாடசாலைகள் வெற்றி கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்
0 Comments:
Post a Comment