களுதாவளை மகா வித்தியாலயத்தின் 67 ஆவது ஆண்டு பூர்த்தியையும் களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் 60 ஆவது பூர்த்தியையும் முன்னிட்டு களுதாவளை மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் மற்றும் களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய மாபெரும் இரத்ததானம் திங்கட்கிழமை (07) களுதாவளை மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் 60 குருதி நன்கொடையாளர்கள் இரத்த தானம் வழங்கியிருந்தனர். உதிரத்தைக்கொடுத்து உயிர் காக்கும் பணியில் ஈடுபட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் பழைய மாணவர் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துள்ளது.
களுதாவளை களுதாவளை மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கமும், களுதாவளை கெனடி விளையாட்டுக் கழககமும் இணைந்து வருடந்தோறும் விளையாட்டு, கல்வி, இரத்தானம், உள்ளிட்ட பல வேறு துறைகளிலும் தமது சேவைகளைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment