மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தரான ஆணொருவர் புதன்கிழமை 09.05.2018 அதிகாலை மரணமடைந்து விட்டதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
கல்குடா - காளிகோயில் வீதியை அண்டி வாழும் 3 பிள்ளைகளின் தந்தையான தாமோதரம் ஞானசுந்தரம் (வயது 43) என்பவரே மரணித்தவராகும்.
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, செவ்வாய்க்கிழமை இரவு வழமைபோன்று வீட்டிலிருந்தவர் திடீரென மயக்கமுற்றுள்ளார்.
இரவு 9 மணிபோல் உறவினர்கள் அவரை உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
எனினும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி அவர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவைத் தாண்டிய வேளையில் மரணித்துள்ளார்.
தனது சட்டபூர்வமான மனைவியைப் பிரிந்துள்ள நிலையில் இன்னொரு பெண்ணுடன் வாழ்க்கை நடாத்தி வந்த அவர் கடன் வழங்கு நிறுவனங்களிடம் இருந்து பெற்று வந்த கடன் தொல்லையால் மன விரக்தியுற்றிருந்ததாகவும் இதனால் இரு குடும்பங்களுக்குமிடையில் தகராறு நிலவி வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இவர் ஏதாவது நச்சுத் திராவகம் அருந்தியிருக்கலாம் என்பது ஆரம்பக் கட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவருவதாகக் கூறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment