தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் செவ்வாய்க் கிழமை (01) பிற்பகல் 02 மணியளவில் நடைபெற்றது.
வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச சபைச் சந்தியியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.
போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள், கட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தன்போது பங்குபற்றியிருந்தனர்.
பன்முகத்தன்மையை உரத்துச் சொல்லி வலியுறுத்த, தமிழ் தேசியத்தின் நியாயங்களுக்கு வலுச்சேர்க்க, கூட்டாட்சியைக் கொலுவேற்றும் புதிய அரசியல் அமைப்பின் உருவாக்கத்தை முன்நகர்த்துமாறு அழுத்தம் கொடுக்க, நிலமீட்பு, அரசியல் கைத்திகளின் விடுவிப்பு, மீழ்குடியேற்றம், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான கரிசனை, போர் விதவையாரின் பொருளாதார மேம்பாடு, இளையோரின் வேலைவாய்ப்பு, மற்றும், தொழிலாளர் துயர்துடைப்பு, என்பன தொடர்பான செயற்பாடுகளை வேகப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து இந்த மேதின நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின பிரகடனத்தை முன்னாள் கிழக்கு மாகாணசபை அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராசசிங்கம் வாசித்தார்.
0 Comments:
Post a Comment