மட்டக்களப்பு கிண்ணையடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் பிரமோற்றவத்தின் 8 ஆம் திருவிழாவாகிய வெள்ளிக்கிழமை (04) ஆலயத்தில் திருவேட்டைத் திருவிழா இடம்பெற்றது. சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலை குருமுதல்வர் ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில் நடைபெற்றது.
மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்த திருவேட்டைத் திருவிழா கிண்ணையடி மில்லர் விளையாட்டு மைதானம் வரை முடிவடைந்ததுடன் இறுதி சங்கார பூசையும் இடம்பெற்றது. குறித்த திருவோட்டைத் திருவிழாவினைக் காண அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிண்ணையடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் பிரமோற்சவம் ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில் கொடியேற்றம் இடம்பெற்றதுடன் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment