மட்டக்களப்பு கல்குடா கும்புறுமூலைப் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற எதனோல் உற்பத்திச்சாலை தொடர்பாக கடந்த வருடம் 2017 மார் 22 ஆம் திகதி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களான நல்லதம்பி நித்தியானந்தன் மற்றும் புண்ணியமூர்த்தி சசிதரன் ஆகியோர் மேற்படி உற்பத்திச்சாலையில் இருந்தவர்களால் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வியாழக்கிழமை 03.05.2018 வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே இந்த வழக்கு மே மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த எதனோல் மதுபான உற்பத்திச்சாலை தொடர்பாக அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவரும் தாக்கப்பட்டு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு கடந்த 14 மாதங்களாக இடம்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்ச்சைக்குள்ளான கல்குடா கும்புறுமூலை வேம்பு பகுதியில் 24 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுவருகின்ற எதனோல் மதுபான உற்பத்திச்சாலை தொடர்பாக எழுந்த அதிருப்தியை அடுத்து தமிழ் முஸ்லிம் சிங்கள சிவில் சமூகங்களும், மார்க்க அமைப்புக்களும், அரசியல்வாதிகளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் கண்டனங்களையும் தொடராக வெளியிட்டு வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment