மிளகாயின் விலைதொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதனால் நஸ்ட்டத்தை ஈடு செய்ய முடியாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிளகாய்ச செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் தவித்துக் கொண்டிருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிளுர், களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருக்கள்மடம், கிராங்குளம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் கடற்கரை அண்டிய மணல் தரைப் பகுதிகளில் மிகுந்த பிரயத்தனத்திற்கு மத்தியில் மிளகாய் செய்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வியாழக்கிழமை (03) மரக்கறிகளுக்கான மொத்த விலையைத் பார்க்குமிடத்து, மிளகாய் 25 ரூபாய், வெற்றிலை 70 ரூபாய் தொடக்கம் 75 ருபாய்
நீலக்கத்தரிக்காய 75 ரூபாய், சின்னவெங்காயம் 120 ரூபாய்,
வெள்ளைக்கத்தரிக்காய் 65 ரூபாய், பயற்றங்காய் 80 ரூபாய், புடலங்காய் 80 ரூபாய், வெண்டிக்காய் 60 ரூபாய், 70 ரூபாய், பாகற்காய் 120 ரூபாயாகவும் காணப்படுகின்றது.
அதுபோல் புதன் கிழமை (02) மரக்கறிகளுக்கான மொத்த விலையைப் பார்க்குமிடத்து, மிளகாய் 35 ரூபாய், வெற்றிலை 70 ரூபாய், 75 ரூபாய்,
நீலக்கத்தரிக்காய 75 ரூபாய், சின்னவெங்காயம் 120 ரூபாய், வெள்ளைக்கத்தரிக்காய் 65 ரூபாய், பயற்றங்காய் 80 ரூபாய், புடலங்காய் 80 ரூபாய், வெண்டிக்காய் 55 ரூபாய், 65 ரூபாய், பாகற்காய் 120 ரூபாயுமாகக் காணப்பட்டது.
இவ்வாறு ஏனைய மரக்கறிகளுடன் ஒப்பிடுகையில் மிளகாயின் மொத்த விலை வெகுவாகக் குறைந்து கொண்டு செல்கின்றது. இதனால் தாம் பாரிய நஸ்ட்டத்தை எதிர் நோக்கியுள்ளதோடு, மன உழசை;சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment