தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ், விவசாயத்தை மேற்கொண்டுவரும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது வறுமையான விவசாயக் குடும்பங்களை மேம்படுத்தும் நோக்கில் வவுணதீவு பிரதேசத்தில் 24 கிராமசேவகர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 25 விவசாய உற்பத்திப் பயனாளிகளுக்கு மின்சார நீர் பம்பிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வவுணதீவு பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் தலைமையில் வியாழக்கிழமை (03.05.2018) நடைபெற்ற இந் நிகழ்வில் கணக்காளர் வீ. வேல்ராஜசேகரம், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ரி. நிர்மலராஜ், விடயதான அலுவலர் பாத்திமா அஸ்றிதா ஆகியோர் கலந்துகொண்டு இவ் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.
0 Comments:
Post a Comment