27 Apr 2018

திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை முதல் அமர்வு

SHARE
திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை முதல் அமர்வு;  செவாய் கிழமை (24) மாலை 2 மணிக்கு திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் புதிய தவிசாளர் வைத்திய காலாநிதி ஜி.ஞானகுணாளன் தலைமையில் இடம் பெற்றது.
தவிசாளர் டாக்டர் ஜி.ஞானகுணாளன் பிரதேச சபையில் தமது புதிய உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போது கன்னியா வென்நீரூற்றின் நிருவாகம் முன்னர் எமது பிரதேச சபையின் கீழ் இருந்து வந்தது. அதனை மீள எமது சபையின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்தி செய்யப்படும். இவ்வாறே துறைசார் விடயங்களை கையாளவும் ஆலோசனை பெறவும் துறைசார் குழுக்கள் அமைக்கப்படும். அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் ஆலோசனைகளைப்பெற்று அமுலாக்கப்படும். இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள சகல உறுப்பினர்களும் ஒத்துழைப்புக்களை வழங்க முன்வரவேண்டும் எனவும் தவிசாளர் ஜி.ஞானகுணாளன் வேண்டுகோள் விடுத்தார்.

அவரது உரையைத் தொடர்ந்து அணைத்து உறுப்பினர்களும் தங்களது பிரேணைகளை முன் மொழிந்து உரையாற்றினார்கள். அனைவரும் தங்களது  பூரண ஒத்துழைப்பை தலைவருக்கு இன மத கட்சி பேதமின்றி வழங்குவதாக உறுதி கூறினார்கள். அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு குடும்பமாக செயல் பட்டு இப் பிரதேச மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயட்சிப்போம் என கூறினார்கள். 





SHARE

Author: verified_user

0 Comments: