5 Apr 2018

ஒரு மாத காலத்திற்குள் காத்தான்குடி நகர திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக நகர சபைத் தலைவர் உறுதி

SHARE
ஒரு மாத காலத்திற்குள் காத்தான்குடி நகரில் சேரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் உறுதியளித்துள்ளார்.
நகர சபைத் தலைவராக பொறுப்பேற்ற அடுத்த சில மணிநேரங்களிலிருந்தே அவசரமும் அவசியமுமாக செய்து முடிக்கப்பட வேண்டிய பணிகளை தான் நேரில் சென்று பார்வையிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்பிரகாரம் செவ்வாய்க்கிழமை 03.04.2018 காத்தான்குடி நகரில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திண்மக்கழிவகற்றல் செயற்திட்டத்தினை நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர்  நகரசபைச் செயலாளர் எம்.ஜே.எப். றிப்கா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அதேவேளை, காத்தான்குடி வர்த்தக நகரினை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டமாக நகரசபை தவிசாளரின் வேண்டுகோளுக்கிணங்க வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நகர சபையின் அனுமதியைப் பெறாத தேவையற்ற விளம்பரப் பதாதைகளை நீக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகிறது.

மேலும் பிரதான வீதியின் மத்திய பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் பூங்கொடிகளைத் தாங்கிய பூஞ்சட்டிகளுக்கான வர்ணம் பூசும் செயல் திட்டமும் நகரசபைச் செயலாளரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: