5 Apr 2018

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக அலிஸாஹிர் மௌலானாவும் ஜனாதிபதியால் நியமனம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த நியமனக் கடிதம் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவுக்குக் கிடைத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதி அமைச்சர் அமீர் அலி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோர் செயற்பட்டு வரும் நிலையில் புதிதாக இந்த இணைத்தலைமை பதவிக்கு அலிஸாஹிர் மௌலானாவும் உள்வாங்கப்பட்டுள்ளார்.


SHARE

Author: verified_user

0 Comments: