5 Apr 2018

மட்டு. மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்தில்

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் தென் தேற்கு உள்ளுராட்சி மன்றத்தின் அங்குரார்ப்பணம் புதன் கிழமை கிழமை (04) பிரதேச சபையின் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆளையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சபைக்கான தவிசாளர் தெரிவு திறந்த முறையில் இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக செ.புஸ்பலிங்கமும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக பி.தேவநேசனும் போட்டியிட்டனர். இதன்போத் செ.புஸ்ப்பலிங்கத்திற்கு ஆதரவாக 8 வாக்குகளும், பி.தேசநேனனுக்கு ஆதரவாக 7 வாக்குளும் வளிக்கப்பட்டதுடன் ஒரு உறுப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்துள்ளார். இறுதியில் மண்முனை தென் தென் தேற்கு உள்ளுராட்சி மன்றத்திற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செ.புஸ்பலிங்கம் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இப்பிர தச சபைக்கு உப தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் த.கோபாலபிள்ளை  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மண்முனை தென் தென் மேற்கு உள்ளுராட்சி மன்றத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி 7 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 3 ஆசனங்களையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு ஆசனத்தையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 3 ஆசனங்களையும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒரு ஆசனத்தையும், சுயேட்சைக்குழு ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: