மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமம் ஸ்ரீ கௌரி அம்பிகா கேதீஸ்வரர் சிவன் ஆலய துவஜாரோகண மஹோற்சவத் திருவிழா புதன்கிழமை (21) ஆரம்பம்பமாகி எதிர்வரும் 30 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.
20 ஆம் திகதி வாஸ்த்து சாந்தி நடைபெற்று 21 ஆம் திகதி முற்பகல் கொடியேற்றம் இடம்பெற்றது. தொடர்ந்து திருவிழாக்கள் இடம்பெற்று 28 ஆம் திகதி திருவேட்டைத் திருவிழாவும், 29 ஆம் திகதி 8 மணிக்கு முத்துச் சப்புறத்திருவிழா இடம்பெற்று, 30 காலை 10 மணிக்கு தீர்த்தோற்சவமும், அன்றிரவு 7 மணிக்கு கொடியிறக்கமும் இடம்பெற்று மறுநாள் 31 ஆம் திகதி சனிக்கிழமை பூங்காவனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
உற்சவகால பிரதம குரு சிவ ஸ்ரீ சரவண காசிபதீஸ்வரக் குருக்கள் தலைமையிலான குழுவினர் கிரியைகளை மேற்கொள்கின்றனர்.
0 Comments:
Post a Comment