மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்திலுள்ள செங்கலடி விவேகானந்தா வித்தியாயத்தில் இடைநிலைப் பிரிவு மாணவர்களின் வரலாற்றுப் பாட அடைவ மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆசிரியர் இராசசிங்கம் நாகேந்திரன் அவர்களால் உருவாக்கப்பட்ட தரம் 7 மாணவர்களுக்கான இலகு வழிகாட்டி துணைப் பாடநூல் சனிக்கிழமை 24.03.2018 வித்தியாலயத்தின் முதல்வர் கே. சிவலிங்கராஜா தலைமையில் பாடசாலை அபிவிருத்தி குழுவின் ஒழுங்கமைப்பில், பாடசாலை பிரதான மண்டபத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வுக்கு கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான பொ. சிவகுரு, நா. குணலிங்கம், ஆசிரிய மத்திய வள நிலைய முகாமையாளர் வ. பஞ்சலிங்கம், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களான த. அகிலன், ப. நல்லரெட்ணம், கிழக்குப் பல்கலைக்கழக 2016ஃ2017 ஆண்டு கல்வி முதுமாணி கற்கை ஆசிரிய மாணவர்கள், மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பா.ச.சங்க அங்கத்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவர் கல்வியின் அடைவு மட்டம் வீழ்ச்சியடைந்து காணப்படும் தற்போதைய காலத்தில் இவ்வாறான கல்வி நிலையை உயர்த்தும் வகையில் இவ்வாறான புத்தக வெளியீடுகள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்கினை வகிக்கும் என நிகழ்வின்போது கல்வித் திணைக்கள அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment