ஏறாவூர் பொலிஸ் பிரிவு மயிலம்பாவெளியில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகராகக் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் தலைக் கவசத்தினாலும், கைத் தாக்குதல் கவசக் கருவியினாலும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பல்லேதெN;க மாவல, சமனல்வத்த, அலவ்வ பகுதியைச் சேர்ந்த எச்.எம்.சி. ஹேரத் (வயது 52) என்பவரே படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சகிச்சை பயனின்றி சனிக்கிழமை 24.03.2018 உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகராகக் கடமையாற்றும் ஹேரத், தனது நீண்ட நாள் குடும்ப நண்பரான லண்டனில் வசிக்கும் திருமதி ராஜலக்ஷ்மி ராஜரெட்ணம் என்பவருடன் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்று அதன் பின்னர் மட்டக்களப்பு மயிலம்பாவெளி இராம்நகர் ஸ்ரீ காமாக்ஷி அம்மன் தேவஸ்தான வருடாந்த வசந்த நவராத்திரி பெருவிழா நிகழ்வுகளைத் தரிசிக்க சனிக்கிழமை இரவு (23.03.2018) 11 மணியளவில் வருகை தந்துள்ளனர்.
அந்நேரம் காமாக்ஷி அம்மன் ஆலயத் தேர் வீதி உலா வந்துகொண்டிருந்துள்ளது.
அம்மன் தேரைக் கண்டதும், தங்களது காரை விட்டிறங்கி ஓரமாக்கி விட்டு ஒதுங்கி நின்று இரு கைகளையும் கூப்பி கும்பிடும்பொழுது எதிர்பாராத விதமாக அங்கு தேர்த்திருவிழா சனத்திரளுக்குள் நுழைந்த மூன்று பேர் கைகூப்பி வணங்கிக் கொண்டிருந்த இருவர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடாத்திவிட்டுத் தலைமறைவாகியுள்ளனர்.
அவ்வேளையில், தாக்குதலில் காயமடைந்த நிலையில் கீழே விழுந்து எழுந்து கொண்ட ஹேரத், ராஜலக்ஷ்மி இருவரும் உடனடியாக தாங்கள் பிரயாணம் செய்த காரில் (ஹேரத்தின் சொந்தக் கார் Nறு 64-8373) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை நோக்கி விரைந்துள்ளனர்.
அங்கு ஹேரத் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சனிக்கிழமை காலை மரணமாகியுள்ளார். காலை வரை அவர் தன்னுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் சத்திர சிகிச்சைக்காக புதிய வெள்ளை ஆடை பெற்று வருமாறு கட்டிலில் இருந்தவாறே கூறியதாகவும் ராஜலக்ஷ்மி பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சம்பவத்தை அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த எறாவூர் பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் சந்தேக நபர்களான 2 வாலிபர்களையும் ஒரு குடும்பஸ்தரையும் கைது செய்துள்ளனர்.
இம்மூவரும் மைலம்பாவெளியைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களே தாக்குதல் நடாத்தி விட்டு தப்பித் தலைமறைவாகிய சந்தேக நபர்கள் என்றும் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட ஹேரத் தலைமையக பொலிஸ் பரிசோதகராக வெவ்வேறு 3 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றியுள்ளார்.
கடைசியாக உடப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வேளையில் இவர் உரிய முறைப்படி முன் சேவை விடுப்பு அனுமதி பெறாமல் லண்டன் சென்று அங்கு 4 வருடங்கள் வாழ்ந்து வந்துள்ள நிலையில் யுத்த காலத்தில் கடமை தவறிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி இவர் மீண்டும் பொலிஸ் சேவையில் இணைந்துள்ளார்.
எனினும், அவர் முன்னர் வகித்த பதவித் தராதரம் ஒருபடி குறைக்கப்பட்டு 2017 இல் பொலிஸ் பரிசோதகராக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இவர் லண்டனில் வசித்தபோதுதான் யாழ்ப்பாணத்திலிருந்து புலம் பெயர்ந்து லண்டனில் வாழ்ந்த தமிழ் குடும்பத்துடனான நட்புக் கிடைத்துள்ளது.
அந்த நட்பு அவர் மீண்டும் இலங்கை வந்து பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டபோதும் தொடர்ந்து வந்துள்ளது.
லண்டனிலுள்ள தமிழ்க் குடும்பத்தினர் தனியாகவோ அல்லது தம்பதிகளாகவோ இலங்கை வரும்போது இந்த பொலிஸ் அதிகாரியும் தனிப்பட்ட முறையில் விடுமுறை பெற்றுக் கொண்டு உதவி ஒத்தாசைக்கும் பாதுகாப்புக்குமாக கூடவே வந்து விடுவார் என்று லண்டன் வாசியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி ராஜலக்ஷ்மி ராஜரெட்ணம் தனது பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னையும் பொலிஸ் அதிகாரியையும் தாக்கிய கும்பல் தனது கைப்பையிலிருந்த 16 ஆயிரம் ரூபாய்கள் ரொக்கப்ப பணத்தையும், தனது தங்க காதணிகளையும் திருடிச் சென்றதாகவும் அவர் முறையிட்டுள்ளார்.
அதேவேளை தாங்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை காரில் சென்றவர்கள் முந்திச் செல்ல முற்பட்டபோது ஏற்பட்டபோது இடம்பெற்ற வாய்த் தர்க்கமே கைகலப்பாக மாறியதாக சந்தேக நபர்கள் வாக்குமூலமளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறேனும் இது ஒரு கொலை நிகழ்வு என்ற அடிப்படையில் தாம் விசாரணைகளைத் துவக்கியிருப்பதாக தெரிவித்த பொலிஸார் தாக்குதலுக்குப் பயன்படுத்திய பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாகக் கூறி;னர்.
கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் மனைவி ஏற்கெனவே இறந்து விட்டதாகவும் அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
கடந்த 17ஆம் திகதி ஆரம்பமான மயிலம்பாவெளி இராம்நகர் ஸ்ரீ காமாக்ஷி அம்மன் தேவஸ்தான வருடாந்த வசந்த நவராத்திரி பெருவிழா 27.03.2018 செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணத்துடன் நிறைவு பெறவுள்ளது.
0 Comments:
Post a Comment