மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுக் கல்விக்கோட்டத்திற்குட்பட்ட சின்னவத்தை அரசியனர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிற்று வரும் 40 வறிய மாணவர்களுக்கு குடைகள் புதன் கிழமை (28) வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி பாடசாலையின் நிருவாகம் மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் அகிம்சா சமூக நிறுவனத்திற்கு விடுத்த கோரிக்கைக்கு இணங்க அந்நிறுவனத்தினல் குடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
அகிம்சா சமூக நிறுவனத்தின் ஆலோசகர் த.வசந்தராசா உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டு மாணவர்களுக்கு குடைகளை வழங்கி வைத்தனர்.
இதுபோன்று இப்பாடசலையில் கல்வி பயிலும் 3 வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை கடந்த வருட இறுதியில் அகிம்சா சமூக நிறுவனம் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment