சமீப சில தினங்களாக சிரியா நாட்டில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள், நோயாளிகள், வயோதிபர்கள் உட்பட அப்பாவிகளான மக்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த இனப்படுகொலைக்கு எதிராகவும் ஐ.நா. மௌனமாக இருப்பதையும் கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏற்பாட்டின்படி வியாழக்கிழமை 01.03.2018 காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலும் அன்றைய தினம் மாலை 4 மணியளவில் திருகோணமலை சிவன் கோவிலடியிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்த கண்டனப் போராட்டத்தில் மனிதாபிமானத்தை நேசிக்கும் மக்கள் அனைவரையும் இனப்படுகொலைக்கு எதிராக குரல்கொடுக்க அணி திரளுமாறு அந்த அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment