மட்டக்களப்பு மாவட்டம் கல்வியிலே இன்னும் பின்தங்கியுள்ளது. மீண்டும் மீண்டும் கல்விக்கு கூடுதலான பங்களிப்புக்களைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் கல்வித்துறையில் 9 வது இடத்தில்தான் உள்ளதும் ஒது துரதிஸ்ட்டம் காணப்படுகின்ற இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் 24 வது இடத்தில் இருக்கின்றது. இந்நிலையில் நாம் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
என மட்டக்களப்பு மவாட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
உலகை மாற்றும் சக்தி இளைஞர்களே! என்று விழிக்கவைத்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 156 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிற்சிகளைப் பூர்த்திசெய்த பயிலுனர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சமூகநலன்புரி அமைப்பின் தலைவர் வே.பாஸ்கரன்அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை (22) நடைபெற்றது.
இதக்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
இந்நிலையில் மிகக் கூடுதலான மாணவர்கள் கல்விப் பொத்தர சாதாரண தரம் கற்ற பின்பு அவர்களது கற்றலை நிறுத்துகின்றார்கள். அதுபோல் கல்விப் பொதுத்தர உயர்தரத்திலே சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்ல முடியாதவர்கள் தங்களது அடுத்த நிலை என்ன எப்பதுகூட அறியாதவர்களாக இருக்கின்றார்கள். இச்சந்தர்ப்பத்தில் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் இவ்வாறான இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்குகின்றமை பாராட்டத்தக்கதாகும். இவ்வாறு கற்றுக் கொள்ளும் இளைஞர் முஷயுவதிகள் எதிர்கால்தில் தமது சொந்த முயற்சியில் வாழ்வில் எழுந்து நிற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றால் வாழ்வில் மிகச்சிற்பான இலக்குகளை அடைய முடியும்.
கல்வி என்பது வெறும் பரீட்சையை மையமாகக் கொண்டு மட்டுப்படுத்தப்படுவதில்லை. மாணவர்கள் அவர்கனோடு தொடர்டைய பாடத்தெரிவுகளைப் பெற்றுக் கற்பார்களாக இருந்தால் எதிர் காலத்தில் அவர்களது வாழ்க்கையை தாமாகவே அமைத்துக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்துவிடும். மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் அவற்றை எவ்வாறு கொண்டு செல்வது போன்ற விடையங்களுக்கு கல்வி இன்றியமையாததாகும்.
பல்வேறு வழிகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறக்கூடய சூழல் இருந்தும் நம்மவர்கள் இன்னும் அரச தொழில் வாய்ப்புக்களைத்தான் நம்பிக்கொண்டும், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுவிட்டு காலத்தையும் வீணடிக்கின்ற நிலமையும் காணப்படுகின்றது.
சமுத்திரப் பல்கலைக் கழகம், கணிணி, சுற்றுலாத்துறை, போன்ற பிற கற்கை நெறிகளையும கற்று பல்கலைக்கழகம் வரைக்கும் செல்லும் வாய்புக்களும் காணப்படுகின்றன. எந்தத் துறையை நாம் தேர்ந்தேடுத்தோமோ அந்தத்துறையில் உச்சம் காண்பவர்களாக இருக்க வேண்டும். 6 மாதகாலம் ஒருப்சியையும், இன்னுமொரு 6 மாத காலம் வேறு பயிற்சியையும் பெற்றுக் கொள்ளும் வழக்கம் தற்கால இளைஞர்களிடத்தில் காணப்படுகின்றது. இவற்றினை விடுதருறது ஒது துறையை துiபோகக் கற்றால் சிறப்பான வாழ்வு அமையும். என அவர் தெரிவித்தார்.
இந் நிகழ்விற்கு ஆத்மீகஅதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி பிரபு பிறேமானந்தாஜீ மகராஜ் அவர்களும் பிரதம அதிதியாகமாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் அவர்களும் இலண்டனில் இருந்து வருகைதந்த நன்கொடையாளர் குமரேசசர்மா அவர்களும் கலந்து சிறப்பித்தார். அத்தோடு இந் நிகழ்வில் மண்முனைப் பற்றுபிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் மனைவடக்கு பிரதேசசெயலாளர் குமாரசிங்கம் குணநாதன்;, மண்முனைதென்மேற்கு பிரதேசசெயலாளர் திருமதி.தட்சணகௌரி தினேஸ்;, மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெட்ணம், போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் செல்வி.இ.ராகுலநாயகி மற்றும்,
சர்வதேசதொண்டு நிறுவனங்களின் திட்ட உத்தியோகத்தர்கள், நன்கொடையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ,மாவட்ட செயலக, பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் பொறுப்பாளர்கள், தொழில்க்கல்வி நிறுவனங்களின் பணிப்பாளர்கள், கிராம அபிவிருத்திசங்கத் தலைவர்கள், கழகங்களின் உறுப்பினர்கள், பெற்றோர், கல்லூரிபயிலுனர்கள், பாடசாலைமாணவர்கள் எனபலரும் கலந்துசிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் முக்கிய அம்சங்களாக பயிற்சியினை பூர்த்திசெய்த 89 பயிலுனர்களுக்கான தேசியதொழில்தகைமை சான்றிதழ்களும், பதிவு செய்யபட்டதிறன் விருத்திபயிற்சியினை பூர்த்திசெய்த 65 பயிலுனர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அத்தோடு 20 வயோதிபர்களுக்கானஉடைகளும் வழங்கப்பட்டன. கல்லூரிக்கான இணையத்தளமும் மாவட்ட அராசங்க அதிபரினால் இதன்போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கபட்டது.
இந்தகல்லூரி கடந்த வருடங்களாக ஆற்றிவந்த செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் பற்றிகல்லூரி பணிப்பாளரால் விபரிக்கப்பட்டது. அந்தவகையில் கல்லூரியின் செயற்பாடுகள் சிறுசிறுபிரிவுகளாகமிகவும் நேர்த்திகரமாக திட்டமிடப்பட்டதனைகாணக்கூடியதாக இருந்தது. புயிற்சி நெறிகள் தொழில்வாய்ப்பினை மையப்படுத்தியதாக அமைந்தது. ஆத்தோடு பயிற்சி பெற்றபயிலுனர்களை உள்ளடக்கிய இளைஞர் அணிஒன்று செயற்பட்டுவருகின்றது.
ஆங்கில மொழியினை முறையாககற்பிப்பதற்கும், கற்பித்தல் முறைமையினை பயிற்றுவிக்கவும் பிரயோக ஆங்கில மொழிகற்பித்தல் பிரிவுமற்றும் தொழில் வழிகாட்டல், வாழ்க்கைத் திட்டமிடல், உளவள ஆற்றுப்படுத்துகை போன்றவற்றை உள்ளடக்கிவிவேகா ஆலோசனைமையம், அத்தோடுகல்லூரியின் பேண்தகு நிலையினைகருத்தில் கொண்டு வருமானம் பெறத்தக்க சிலசெயற்பாடுகள், கணினிசார் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் ஒருபிரிவு என சிறப்பானதிட்டமிடலுடன் செயற்படுவதால் தான் இவ்வாறுபல நூறு மாணவர்களுக்கு சான்றிதழினைவழங்கக் கூடியதாகஉள்ளது.
சுவாமி விவேகானந்தரின் எதிர்பார்ப்பிற்கு அமைவாக இவ்வாறான மனிதநேயப் பணிகளினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதோடு, அவரின்; சமூக நலசிந்தனைகளை வளர்ந்துவரும் இளம் சந்ததியினரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், அவர்களிற்குமக்கள் சேவையின் மகத்துவத்தினை புரியவைக்கும் நோக்கிலும் தான் சுவாமி விவேகானந்தரின் பிறந்ததினத்தினை வருடாவருடம் சிறப்பாககொண்டாடுவதாககல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment