மட்டக்களப்பு றோட்டறிக் கழக சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் விஷேட தேவையுடைய சிறுவர்களுக்கு உடுதுணிகள் உள்ளிட்ட அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை 24.03.2018 மட்டக்களப்பில் நடைபெற்றது.
றோட்டறியன் முன்னாள் தலைவர் ஆறுமுகம் இராஜேந்திரனின் அனுசரணையில் நடப்பு ஆண்டுக்கான தலைவர் எஸ். சங்கரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சத்துருக்கொண்டான் ஓசானாம் விசேட தேவையுடைய சிறுவர்கள். நொச்சிமுனை தரினம் விழிப்புனற்றோர் பாடசாலை மாணவர்கள், கல்லடி ஹரி சிறுவர் இல்லம் மற்றும் விபுலானந்தா வயோதிபர் இல்லம் என்பவற்றில் பராமரிக்கப்படுவோருக்கு உதவிப் பொருட்கள் உட்பட ஒரு நாள் உணவிற்கான பணம் என்பன வழங்கப்பட்டன.
றோட்டறிக் கழகத்தின் உதவிச் செயலாளர் கே. சதாசிவம் மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவர் வி. பிரதீபன். பெண் றோட்டறியன் தமயந்தி இராஜேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment