9 Mar 2018

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அஞ்சல் திணைக்களத்தின் பிரதம தபாலதிபராக ஏ.சுகுமார் கடமையேற்றுள்ளார்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் அஞ்சல் திணைக்களத்தின் பிரதம தபாலதிபராக ஆறுமுகவடிவேல் சுகுமார் தனது கடமையை கடந்த இரண்டாம் திகதியன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கான பதவி உயர்வு நியமனத்தை அஞ்சல்மா அதிபரின் விஷேட பரிந்துரை மூலம்தான் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதம தபாலதிபர் நியமனம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் நகரினை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஏ.சுகுமார் அவர்கள் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், அஞ்சல் தொலைத் தொடர்புகள் உத்தியோகத்தர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மட்டக்களப்பு ஸ்ரீ பகவான் சத்யசாயி நிலையத்தின் முன்னாள் செயலாளரும், அகில இலங்கை சமாதான நீதவானாகவும் இருந்து காத்திரமான சமூகப்பணியையும், கல்விப்பணியையும் முன்னெடுத்தவர். 

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவராக இருந்து பாடசாலையின் அபிவிருத்தியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மட்டக்களப்பு மாவட்டத்தின் அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்தில் பிரதம இலிகிதராக கடமையாற்றிய அவர் சுமார் 26 வருடங்கள் அஞ்சல் திணைக்களத்தில் கடமையாற்றிய சேவையும், அனுபவமும், நிர்வாகத்திறனும் கொண்ட இவர் தற்போது  மட்டக்களப்பு மாவட்டத்தின் அஞ்சல் திணைக்களத்தின் பிரதம தபாலதிபராக பொறுப்போற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: