மட்டக்களப்பு வலயகக் கல்வி அலுவலகத்திலுள்ள மண்முனை கோட்டத்திற்கான தமிழ்மொழி தினம்(2018) இதற்கான எழுத்தாக்கற் போட்டிகள் சனிக்கிழமை (10) காலை 8.30 மணியளவில் மண்முனை கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.அருட்பிரகாசம் தலைமையில் மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியின் மண்டாபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த தமிழ்மொழி தினப்போட்டியில் அக்கோட்டத்திலுள்ள 39 பாடசாலைகள் பங்குபற்றவுள்ளன. பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களே இப்போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர். இப்போட்டியில் கட்டுரையாக்கம், கவிதையாக்கம், குறுநாடக ஆக்கம், இலக்கியநயத்தல், இலக்கணப் போட்டிகள், திறனாய்வுப்போட்டி, சிறுகதை ஆக்கம், ஆக்கம் எழுத்து உள்ளிட்ட 14 போட்டிகள் நடைபெறவுள்ளதாக மண்முனை கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.அருட்பிரகாசம் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment