மண்முனை தென் எருவில் பற்று பிரசேத்தில் நுண்கடப் பிரச்சனை மிக முக்கியமான பிரச்சனையாகக் காணப்படுகின்றது. பெண்கள் மனம் வைத்தால் இந்த நுண்கடன் பிரச்சனையை இல்லாதொழிக்கலாம் என்பது எமது அதீத நம்பிக்கை. இந்த செய்திகளும் மக்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.
என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலார் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தெரிவித்துள்ளார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு வியாழக்கிழமை (08) மாலை தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைமையுரையாறும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
உடறுதி கொண்ட ஒரு ஆணைவிட மன உறுதி கொண்ட ஒரு பெண் சிறந்தவள் என கற்பிக்கப்படுகின்றாள். இவற்றைவிட சூரிய உதயத்தாலும், அன்னையின் தாய்ப்பாலினூடாகவும்தான் இவ்வுலகம் இயங்ககின்றது என்றகின்றார் ஓர் எழுத்தாளர். தாய், மனைவி, சகோதரி என உறவுகளிடையே நீக்கமற்று நிலைத்து நிற்பவள் பெண். வீட்டில் முடங்கிய பெண்கள் தற்போது வனிலே பறக்கின்றாள் என்றால் அதற்கு வித்திட்ட போராட்டங்களின் வெற்றியே மார்ச் மாதம் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகின்றது.
மகளிர் தினத்தின் அடிப்படை பெண்ணியம் பேசுவது அல்ல மாறாக ஆணாத்திக்கத்திலிருந்து பல்வேறு போராட்டங்களின் அடிப்படையில் தாமும் சாதிக்க முடியும் தங்களுக்கான கொள்கைகளை தாங்களே வகுத்துக் கொள்ள முடியும். என்ற ஆளுமையின் வெற்றிதான் மகளிர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுக் கொண்டாடப்படுகின்றது.
உள்ளரங்குகளில் நடாத்துகின்ற நிகழ்வுகள் வெற்றியளிப்பத்தில்லை, என்ற காரணத்தினால் இந்நிகழ்வையும் எமது பிரதேச செயலகம் வெளியரங்கில் கொண்டாட வேண்டும் என தீர்மானித்ததன் அடிப்படையில் இடம்பெற்றது.
ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது வெறுமனே கற்களையும். மண்ளையும் கொண்டு கட்டப்படும் கட்டடங்களில் மாத்திரம் முன்னேற்றம் காண்பத்தில்லை. ஒரு குடும்பத்தில் பெண் மதிக்கப்படுகின்றபோது அத்தகைய சமூகம் பாரிய முன்னேற்றத்தை அடைக்கின்றது. இதற்கு பல நாடுகளும். பல சமூகங்களும் சான்றாக இருக்கின்றன. இவ்வாறு பெண்கள் மத்திக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை , தங்களுடைய உரிமைகள் உள்ளிட்ட அத்தனை உரிமைகளையும் உடையவர்கள். அவர்களின் உரிமைகளும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
மண்முனை தென் எருவில் பற்று பிரசேத்தில் நுண்கடப் பிரச்சனை மிக முக்கியமான பிரச்சனையாகக் காணப்படுகின்றது. பெண்கள் மனம் வைத்தால் இந்த நுண்கடன் பிரச்சனையை இல்லாதொழிக்கலாம் என்பது எமது அதீத நம்பிக்ககை. இந்த செய்திகளும் மக்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காகவும்தான் நாமும் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்துகின்றறோம் என அவர்தெரிவித்தார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந், உள்ளிட்ட பல அரச அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின்போது ஆரோக்கியமான இயற்கை உணவு வகைகள். பாரம்பரிய உணவு வகைகள், என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், பெண்களுக்கான சமனிலை ஓட்டம், கயிறுழுத்தல், உள்ளிட்ட பல போட்டிகளும் இடம்பெற்றன. மேலும் இதன்போது நுண்கடன் பிரச்சனையிலிருந்து நீங்குதல் தொடர்பான வீதி நாடகமும், அரங்கேற்றப்பட்டதோடு, இப்பிரதேசத்திலிருந்து மிக நீண்டகாலமாக பெண்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டு பெண்கள் கிராம அபிவிருத்திச் சங்கங்கங்களிலிருந்து செயற்பட்டு வரும் 2 பெண்களும், பொன்னாடை போர்த்தி, வாழ்த்துப்பா, ஞாபகச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment