6 Mar 2018

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 75வது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியேற்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக எம்.என்.எஸ். மெண்டிஸ் தனது கடமைகளை திங்கட்கிழமை 05.03.2018 பொறுப்பேற்றுக் கொண்டார்.
இத்துடன் இம்மாவட்டத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகப் பதவியேற்றுக் கொண்ட 75வது அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய சமன் யட்டவர கொழும்பு வடக்கு பகுதிக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து வெற்றிடமான அந்த இடத்திற்கு கம்பளை பிரதேசத்திற்கான பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய எம்.என்.எஸ். மெண்டிஸ், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட‪ பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இடம்பெற்ற பொலிஸ் அணி வகுப்பு மரியாதையைத் தொடர்ந்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த வைபவத்தில் சமய பிரமுகர்கள் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர், மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: