18 Feb 2018

தேசிய பாரிசவாத நடை பவனி முதன்முறையாக எதிர்வரும் 24ஆம் திகதி மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.

SHARE

தென்னிலங்கைக்கு வெளியே முதன் முறையாக வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தழுவியதாக மட்டக்களப்பில் தேசிய பாரிசவாத விழிப்புணர்வு நடைபவனி இம்மாதம் 24ஆம் திகதி காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விஷேட நரம்பியல் வைத்திய நிபுணர் வைத்தியர் ரீ.திவாகரன் தெரிவித்தார். 
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்@ கிழக்கு மாகாண மக்களுக்கு பெரும் நன்மை பயக்கும் வண்ணம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த இரு வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக இடம்பெற்று வரும் பாரிசவாத தாக்குதலுக்கான சிகிச்சைகள் பற்றிய விழிப்பூட்டலை மேலும் பயனுள்ளதாக்கும் விதத்தில் விழிப்புணர்வூட்டும் தேசிய பாரிசவாத நடைபவனி மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.

தேசிய பாரிசவாத சங்கத்தின் தலைவரும் நரம்;பியல் வைத்திய நிபுணருமான எம்.ரி.எம். றிப்ஸியின் தலைமையில் இடம்பெறும் இந்த நடைபவனி விழிப்பூட்டும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தை அண்டியுள்ள பாடும் மீன் சிறுவர் பூங்காவில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு நகர வெபர் மைதானத்தில் நிறைவு பெறவுள்ளது.

இலங்கையில்  5வது தடைவையாக இவ்வாறானதொரு பிரமாண்ட விழிப்பூட்டல் நிகழ்வில் சுகாதாரத்துறையினர் உட்பட சுமார் 5000 பேருக்கு மேல் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நடைப் பயணத்தின் இறுதியில் குருதியமுக்கம் மற்றும் குருதியில் சீனியின் அளவு என்பன இலவசமாக பரிசோதிக்கப்படும்.

இம்மாபெரும் நிகழ்வை முன்னிட்டு பாடசாலைகளிடையே சுவரொட்டிப் போட்டியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இந்நிகழ்வில் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

வுhசழஅடிழடலளளை வுசநயவஅநவெ எனப்படுகின்ற இரத்தக் கட்டியைக் கரைக்கும் சிகிச்சை முறைமூலம் சிகிச்சை அளிக்கும் முறை இலங்கையில் ஒரு சில அரசாங்க வைத்தியசாலைகளிலேயே காணப்படுகின்றது. அந்த சிகிச்சை முறை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடங்கப்பட்டுள்ளது முழுக் கிழக்கு மாகாண மக்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.

எனவே பாரிசவாத நோயினால் தாக்கப்படுவோர் கூடியபட்சம் 3 மணித்தியாலங்களுக்குள்ளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை அணுகி தங்களை குணப்படுத்திக் கொள்ள முடியும்.

உலகளாவிய ரீதியில் உயிர்க்கொல்லும் அல்லது மனிதர்களை ஊனமாக்கும் நோய்களில் பாரிசவாதம் மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துள்ளது.

உலகெங்கிலும் வாழும் மக்களில் ஆறு பேரில் ஒருவர் என்ற அடிப்படையில் 2 செக்கன்களுக்கு ஒருவர் பாரிசவாத தாக்குலுக்கு உள்ளாகிப் பாதிக்கப்படுகின்றனர். அத்தகைய பாதிப்புக்குள்ளானோரில் 3 சதவீதமானோரே மீளமுடிகின்றது.

இலங்கை தேசிய பாரிசவாத சங்கமானது இலங்கையில் பொதுமக்களுக்கான விழிப்பூட்டல் நடவடிக்கைகளையூம் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாரிசவாத நோயாளர்களின் பராமரிப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளையும் நடாத்துவதனூடாக பாரிசவாத பராமரிப்பையும், பாரிசவாத தடுப்பிற்குரிய நடவடிக்கைகளையும் ஊக்குவிப்பதிலும் ஈடுபட்டுவருகின்றது.






SHARE

Author: verified_user

0 Comments: