மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் சில கிராமங்களிலுள்ள உள் வீதிகளிலும் மழை நீர் தேங்கிக் காணப்படுகின்றது.
மழையுடன் சேர்த்து பலமான காற்றும் வீசி வருகின்றது.
இந்நிலையில் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் காக்காச்சுவட்டை சின்னவத்தை வீதியில் அமைந்துள்ள நவகிரி ஆறுக்குக் குறுக்காகவுள்ள மேம்பாலத்தை ஊடறுத்து மழை நீர் பாய்ந்து வருவதநால் அவ்வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் சிரமத்தினை எதிர் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்கட் கிழமை (26) பதிவு செய்யப்பட்ட மழை வீழ்சியின் விபரங்களையும் வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் மட்டக்களப்பு நகரில் 39.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரி நகர் பகுதியில் 17.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும்,
தும்பங்கேணிப் பகுதியில் 21.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளிப் பகுதியில் 50.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடாப் பகுதியில் 79.03 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 19.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 34.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 7.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 45.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கிரான் பகுதியில் 50.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மற்றும் கதிரவெளிப் பகுதியில் 10.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளது.
0 Comments:
Post a Comment