ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டான்சேனையில் மூதாட்டி ஒருவரின் குடிசை தீயினால் கருகி நாசமடைந்துள்ளதாக எறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை 06.02.2018 அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் முற்கொட்டான்சேனை சாத்திரியார் வீதியை அண்டி வாழும் பொன்னையா பிள்ளையம்மா (வயது 71) என்பவரின் குடிசையே எரிந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது அக்குடிசையில் மூதாட்டி இருந்திருக்கவில்லை என்றும் என்றும் ஆயினும் மூதாட்டியின் உடமைகள் சேதமடைந்திருப்பதாகவும் பிரிவுக் கிராம சேவையாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் விபத்தா அல்லது சதி நாசகாரச் செயலா என்பது பற்றி தாம் விரிவான விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment