ஏறாவூர் நகர சபைக்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் வாக்களிப்பு தினமான சனிக்கிழமை அதிகாலை10.02.2018 தாக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் ஓட்டுப்பள்ளி வட்டார வேட்பாளர் எம்.பி.எம். இர்சாத் ஹனி என்பவரே மோட்டார் சைக்கிளுக்கு அணயிப்படும் தலைக்கவசத்தினால் தலையிலும் வயிற்றுப் பகுதியிலும் தாக்கப்பட்ட நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவைத் தாண்டி சற்று நேரத்தில் (சனிக்கிழமை அதிகாலை 12.30 மணி) இச்சம்வபம் அவரது வீட்டுக்குப் பக்கதிலுள்ள வீதியிலேயே இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ள தமது கட்சி உறுப்பினரை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் சென்று பார்வையிட்டார்.
தேர்தல் வன்முறையாகப் பதிவாகியுள்ள இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment