26 Feb 2018

மட்டக்களப்பில் மிக நீட்ட நாட்களுக்குப் பின்னர் மழை

SHARE
மட்டக்களப்பில் மிக நீட்ட நாட்களுக்குப் பின்னர் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அண்மைக்காலமாக அதிக உஷ்னதுடன் கூடிய வெயிலுடன் கூடிய காலநிலை  நிலவி தந்த நிலையில் சனிக்கழமை (24) மாலை வேளையிலிருந்து மழை பெய்து வருகின்றது. 
வருடாந்தம் டிசம்பர், மற்றும் தை மாதைங்களில் பெய்து வரும் அதிக மழை விழ்ச்சி இவ்வருடம் குறைவடைந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான சிறுபோக வேளாண்மைச் செய்மையும் இவ்வருடம் பெய்கை பண்ண முடியாமல் போயுள்ளன.

இதனால் மாவட்டத்தின் பெரும்பானால இடங்களில்  அதிக வரட்டியுடன் கூடிய காலநிலை காணப்பட்டு வந்தன். இந்நலையில் சனிக்கிழமை மாலை வேளையிலிருந்து மாவட்டத்தின் பரவலான இடங்களில் ஓரளவான மழை பெய்து வருவதுடன் வானமும் இருண்ட நிலையில் கபணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது இவ்வாறு இருக்க சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிரான் பகுதியில் 170.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 15.0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 86.8 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 23.0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், மைலம்பாவெளி பகுதியில் 18.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், மட்டக்களப்பு நகர் பகுதியில் 21.9 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக வாநிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.











SHARE

Author: verified_user

0 Comments: