27 Feb 2018

விபத்தை ஏற்படுத்தி உயிரிழக்கச் செய்து விட்டு தப்பிச் சென்ற ரிப்பர் வாகனம் பொலிஸாரால் கண்டு பிடிப்பு

SHARE
மட்டக்களப்பு சந்திவெளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 25.02.2018 வீதி விபத்தை ஏற்படுத்தி ஒரு இளைஞர் பலியாகவும் இன்னொருவர் படுகாயமடையவும் காரணமாகவிருந்த ரிப்பர் வாகனம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 27.02.2018 கைப்பற்றப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரையம்பதியிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை எதிர் திசையிலிருந்து அதிவேகமாக கட்டுப்பாட்டை இழந்து பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் மோதியதால் விபத்து சம்பவித்து ஆரையம்பதி விபுலானந்தா வீதியைச் எஸ். சஞ்சேய்குமார் (வயது 26) எஸ். சதீஸ்குமார் (வயது 21) படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டிருந்தார்.

சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய ரிப்பர் சாரதி வாகனத்தை சடுதியாகத் திருப்பிக் கொண்டு தலைமறைவாகியிருந்த நிலையில் தெருக்களில் பொருத்தப்பட்டிருந்த காணொளிக் கமெராக்களின் உதவியுடன் மேற்படி வாகனம் மறைத்து வைக்கப்படிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பொலிஸார் சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: