27 Feb 2018

2017ஆம் ஆண்டில் மட்டு. மாவட்டத்தில் 6080 மில்லியன் செலவில் 12496 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு

SHARE
6139 மில்லியன் செலவில் 14177 அபிவிருத்தித் திட்டங்கள் இனங்காணப்பட்டு அவற்றில் 6080 மில்லியனில் 12496 திட்டங்கள் கடந்த 2017ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளன என மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மா.உதயகுமார் தெரிவித்தார்.
திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் 2018ஆம் ஆண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 

மாவட்ட செயலகத்தினால் 2087.70 மில்லியன் செலவில் 6891 திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இணை அமைச்சுக்களின் 2385.99 மிலலியன் நிதியில் 4946 அபிவிருத்தித்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சபையின் 845 மில்லியன் ரூபாவில் 524 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதே போன்று விசேட அபிவிருத்தித்திட்டத்தின் கீழான 608.8 மில்லியன் ரூபா நிதியில் 3 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்திக்கான திட்டத்தின் ஊடாக 83 திட்டங்களுக்காக 433 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் 49 திட்டங்களுக்காக 874.7 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டள்ளது.

இந்தத் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவுறுத்தி பொது மக்களுக்கு உதவிய இணைத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மத்திய மாகாண அரச உத்தியோகத்தர்கள், சர்வதேச, உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். 

இவ்வாண்டு 11ஆயிரத்து 12 மில்லியன் ரூபாவுக்கான திட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றுக்கான அனுமதிகள் வழங்கப்படுமிடத்து இந்த ஆண்டு இந்த வெலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கிறேன். 

அத்துடன், 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் ஒத்துழைப்பினை வழங்கிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான மட்டக்களப்பு மாவட்டத்தின் 2018ஆம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ச.வியாழேந்திரன் , பிரதேச  செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




SHARE

Author: verified_user

0 Comments: