நாட்டின் சட்டத்தரணிகளின் சங்கத் தலைவர் யு.ஆர்.டீ.சில்வா வெள்ளிக்கிழமை (16) மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றுக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
சட்டத்தரணி சங்கத் தலைவரை வரவேற்ற மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உட்பட மாவட்டத்தின் சட்டத்தரணிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
இதேவேளை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் யு.ஆர்.டீ.சில்வா பெறுமதியான சட்டப் புத்தங்களையும் நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் வழங்கி வைத்தார்.
இதன்போது சட்டத்தரணிகளான பிரேம்நாத், விநோபா இந்திரன், சின்னையா, மற்றும் ஏனைய சட்டத்தரணிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இலங்கை சட்டத்தரணிகளின் சங்கத்தலைவர் ஒருவர் முதன்முதலில் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment