எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் மகிழூர் பெரும் பிரதேசத்தின் அபிவிருத்தியின் ஆரம்ப நாளாக அமையப் போகின்றது. கிராமங்களின் அபிவிருத்திக்கு பொறுப்பாக அமையும் உள்ளுர் அதிகார சபைகளிற்கான தேர்தல் இம்முறை கலப்பு முறையில் நடைபெறுவது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.
அனைத்து வட்டாரமக்களுக்கும் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்களுடைய வட்டாரத்தில் இருந்தே ஓர் பிரதிநிதியை தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப் பட்டிருக்கின்றது. ஆனாலும் மக்கள் தங்களுடைய வாக்குப் பலத்தை சரியாகப் பயன்படுத்தாவிடின் எதிர்வரும் 5 ஆண்டுகள் தங்கள் கிராமத்தினை இருளுக்குள் தள்ளவேண்டி ஏற்படும். எந்தக் கட்சியினைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் குடிகாரர்களிற்கு எக்காரணங் கொண்டும். வாக்களிக்க வேண்டாம் என கடந்தவாரம் எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கூறயிருந்தமை செய்திவாயிலாக அறியக்கிடைத்தது. அத்தோடு இப் புதியதேர்தல் முறையினால் மக்கள் வழங்கும் வாக்குகள் தங்கள் நம்பிக்கைக்குரியவரை தெரிவு செய்யுமே தவிர வேறுமதத்தவரையோ, இனத்தவரையோ தெரிவு செய்வதற்கு வழியமைக்காது என்பது வெழிப்படையான உண்மையாகும்.
என மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியில் அமைந்துள்ள மகிழூர் வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ந.சஞ்ஜீவ் தெரிவித்தார்.
தனது ஆதரவாளர்களின் மத்தியில் செவ்வாய்க் கிழமை (02) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..
மகிழூர்முனை110 பீ, மகிழூர்முனை 11 ஏ, மகிழூர் மேற்கு, கண்ணகிபுரம், ஆகியகிராசேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய மகிழூர் வட்டாரத்தில் ஐக்கியதேசியக் கட்சியில் வேட்பாளராக நான் களமிறங்கியிருக்கிறேன். எனது பிரதேசத்தின் வளர்ச்சியில் நான் பங்கெடுக்க வேண்டும் எனும் ஆர்வமே என்னை இத்தேர்தலில் களமிறங்குவதற்கு தூண்டியது. அதுமட்டு மல்லாமல் எனது வட்டாரத்தில் ஏனைய கட்சிகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் வேட்பாளர்களைப் பார்க்கிலும் என்னால் சிறப்பாக தொழிற்பட்டு எனது வட்டாரத்திற்கு எந்தவித பாகுபாடுமின்றி சேவைசெய்ய இயலும் எனும் தன்னம்பிக்கையில் நான் இத்தேர்தலில் களமிறக்க முக்கியகாரணமாக இருந்தது.
அத்தோடு விகிதாசாரத்திற்குரிய வேட்பாளராக சமூகசேவகியான அழகுராசா அபிராமிப்பிள்ளை களமிறங்கியிருக்கின்றார். அனுபவமிக்க ஓர் பெண் எனது வட்டாரத்தில் களமிறங்கியிருப்பது முக்கியவிடயமாகும். புதியதேர்தல் முறையில் பெண்களிற்கான உறுப்புரிமை கட்டாயமாக்கப்பட்டிருப்பதனால் இம்முறை தேர்தலில் அதிகூடியவாக்குகளைப் பெற்று எங்களுடைய வட்டாரத்திற்கு இரு ஆசனங்களை பெறுவோம் எனும் நம்பிக்கையும் அதற்கான சாதகமான சூழல் காணப்படுவதையும் உறுதியாக கூறிக்கொள்கிறேன்.
அபிவிருத்தி என்பது நிதிவளத்தின் மூலம் செய்து முடிக்கவேண்டிய ஒருவிடயம். பிரதேச சபைகளிற்குரிய ஒதுக்கீட்டின் மூலம் மாத்திரம் எனது வட்டாரத்தில் இருக்கும் தேவைகள் நிறைவேற்றி முடிப்பதுசாத்தியமற்ற விடயாமாகும். ஆகவே ஆளுந்தரப்பின் ஓர் உறுப்பினராக நான் செல்வதனால் பிரதேசசபை நிதி ஒதுக்கீடுத விர்ந்து வேறுவழிகளில் எனது வட்டாரத்திற்காக நிதியினைப் பெற்று தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் எனும் நம்பிக்கை என்னிடம் காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய பல அபிவிருத்திகளை செய்தவரும், தற்போதும் தமிழர் பிரதேசங்களில் பல அபிவிருத்திகளைச் செய்து வருபவருமான முன்னாள் பிரதியமைச்சரும், ஐக்கியதேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளருமாகிய சோ.கணேசமூர்த்தியின் நேரடி வழிகாட்டலில் மிகவும் பலம் பொருந்திய அணியாக பட்டிருப்புத் தொகுதியில் காணப்படும் 03 பிரதேசசபைகளிலும் களமிறங்கியிருக்கின்றோம். நிச்சயமாக 03 பிரதேசசபைகளும் ஐக்கிய தேசியக் கட்சி வசமாகுவது உறுதி.
மக்கள் சரியானமுறையில் சிந்தித்து வாக்களிப்பதே முக்கியவிடயாகும், ஒவ்வொரு வட்டாரத்திலும் தெரிவுசெய்யப்பட்டிக்கும் வேட்பாளர்களின் இயலுமை, ஆற்றல் மற்றும் இதுவரைகாலம் கிராமத்திற்காக ஆற்றியபொதுச் சேவைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து சிறந்தவருக்கு கட்சிபேதம் இன்றி வாக்களிப்பதன் மூலமே தங்கள் ஒட்டு மொத்தகிராமத்தின் அபிவிருத்தி எதிர்வரும் 05 ஆண்டுகளிற்கு தீர்மானிக்கப்படும்.
அதனை விடுத்து போலி வார்த்தைகளுக்கும், உணர்ச்சி பூர்வமான வார்த்தைகளிற்கும் மயங்கி தங்களுடைய வாக்குகளை வழங்குவார்களாயின் தங்கள் கிராமத்தினை தாங்களே படுகுழியினுள் தள்ளுவதாகவே அமையும். ஆயினும் மக்கள் இத்தேர்தலில் தெளிவடைந்திருப்பது அவதானிக்கக் கூடியதாக அமைகின்றது. ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு இம்முறை தகுந்த பாடம் புகட்டுவதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment