சகோதர இனத்தவர்களுக்கு தொழில் கொடுத்த படுவான்கரை மக்கள், இன்று தொழிலை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. என மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் தெரிவித்தார்.
பாரதி படிப்பகத்தின் ஏற்பாட்டில் நேற்று(20) சனிக்கிழமை நடைபெற்ற, சஞ்சிகை வெளியீடும், சாதனையாளர் பாராட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
கோட்டக்கல்விப் பணிப்பாளர் தொடர்ந்தும், உரையாற்றுகையில்,
படிக்க வேண்டும், எதிர்காலத்தில் நற்பிரஜையாக வேண்டுமென்ற எண்ணத்தினாலையே நாம் முன்னுக்கு வரமுடியும். மாணவர்களது நோக்கமும் எப்போதும் உயர்வானதாகவும், இலட்சியம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
முன்னைய காலத்தில் படுவான்கரைப்பகுதிக்கு சகோதர இனத்தவர்கள் தொழில்செய்ய வந்தனர். இன்று அவர்கள் உயர்த்திருப்பதுடன், படுவான்கரையிலிருந்து சகோதர இனத்தவர்களின் இடத்திற்கு தொழில் தேடி செல்ல வேண்டிய நிலையில்தான் நாம் இருந்து கொண்ருக்கின்றோம். தற்கால சூழலில் நாம் முன்னுக்குவருவதாகவிருந்தால் கற்க வேண்டும். கற்பதன் மூலமே முன்னுக்குவர முடியும். கிராமத்து பிள்ளைகளிடமும் திறமையிருக்கின்றது. குறிப்பாக அண்மையில் வெளியான உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில், முன்நிலையை பெற்றுள்ளவர்கள் கிராமத்துப் பிள்ளைகளே.
நமக்குள்ள திறமைகளை, வேறுவழியில் சிதறடிக்க கூடாது. மாணவர்களது கவனத்தினை கலைப்பதாக தொலைபேசிகளும், தொலைகாட்சிகளும் இருக்கின்றன. அவற்றிற்கு உடந்தையாகாது, எமது நோக்கத்தினை நிறைவேற்றும் வரை பூரண கவனத்தினை கல்வியின்பால் செலுத்த வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment