24 Jan 2018

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பாரிய கண்சிகிச்சை வைத்திய முகாம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பாரிய கண் சிகிச்சை முகாம் ஒன்று செவ்வாய் கிழமை (23) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது புதன்கிழமையுடன் (24) வரை இடம்பெறவுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்….

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதி மற்றும், எழுவாங்கரைப் பகுதியிலும் அமைந்துள்ள ஏழை மக்களின் கண் நோயினைத் தீர்த்து வைக்கும் நோக்கில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையும், கல்முனை வடக்கு ஆதர வைத்தியசாலையும் இணைந்து, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய இங்கிலாந்திலிருந்து வருகை தந்திருக்கும், “மியோட்” எனப்படும் அமைப்பின் உறுப்பினர்களான சிரேஸ்ட கண் சத்திர சிகிச்சை நிபுணர்களாலும்,  இலங்கையிலிருக்கின்ற கண் சத்திர சிகிச்சை நிபுணர்களாலும், இச்சிசிக்சை முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இவற்றுக்கு மேலாக மேலதிகமாக எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் இதே வைத்தியசாலையில் அவுஸ்ரேலியாவிலிருந்து வருகைதர இருக்கின்ற ஒரு கண் சத்திர சிகிச்சை நிபுணரினாலும் இதுபோன்றதொரு கண் சிகிச்சை முகாம் நடாத்தப்பட இருக்கின்றது. 

இந்ந்த முகாமில் கண்பார்வையற்ற அல்லது கண்பார்வை குறைந்த நோயாளர்களை இனம் கண்டு, “கற்றேக்” நோயாளிகளுக்கு எதிர்வரும், வியாழக் கிழமையும் (25) , வெள்ளிக் கிழமை (26) , கல்முனை ஆதார வைத்தியசாலையில் அதற்குரிய சத்திரசிகிச்சைகள் நடைபெறவுள்ளன. கிட்டத்தட்ட 150 இற்கு மேற்பட்ட “கற்றேக்” நோயாளிகளுக்கு சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். 

எமது இச்செயற்பாடுகளுக்கு இங்கிலாந்திலுள்ள “மியோட்” எனும் அமைப்பும், களுவாஞ்சிகுடி நலம்புரிச் சங்கத்தின் பிரித்தானியாக் கிளையும், இணைந்து இ;வைத்திய முகாமிற்கு அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: