நாளை ஞாயிற்றுக் கிழமை (14) இந்துக்கள் அனைவரும் தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடவுள்ள இந்நிலையில் இன்று சனிக்கிழமை (13) வியாபார இஸ்த்தலங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புத்தாடைகள் உள்ளிட்ட வீட்டு பாவனைப் பொருட்ம் கொள்வனவு செய்துவரும் மக்கள், பழ வகைகள், கரும்பு, மண்பானை, அகப்பை, பட்டாசு, உள்ளிட்ட பொருட்களையும் கொள்வனவு செய்துவருவதை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான நகரங்களில் சனக்கூட்டம் அதிகமாகக் காணப்பட்டு வரும் இந்நிலையில் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் பகுதியில் அதிகளவு சனக்கூட்டத்தையும் அவதானிக்க முடிகின்றது.
படுவான்கரைப் பிரதேசமான போரதீவுற்று மற்றும் மண்முனை தென்மேற்கு போன்ற பிரதேச மக்களில் அதிகம்பேர் தமது அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களை களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் பகுதியிலே கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment