14 Jan 2018

சோளன் அறுவடை விழா

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவட்டை கிராமத்தில் 17 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்டடிருந்த சோளன் செய்கை அறுவடை விழா வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்று.
மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் அப்பகுதி விவசாயிகள் இதனை மேற்கொண்டிருந்தனர்.

அப்பகுதி விவசாயப் போதனாசிரியர் எஸ்.சசிகுமாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன், போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி,  உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன், தெற்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.சிவஞானம், மற்றும் விவசாயிகள்   உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சம்பிரதாய முறைப்படி சோளன் ஆறுவடை செய்து பொங்கல் வைத்து பூஜைகள் இடம்பெற்றன்.

இதன்போது கருத்து தெரிவித்த பாடவிதான உத்தியோகஸ்த்தர் எஸ்.கணேசமூர்த்தி…..

மட்டக்களப்பு மவாட்டத்தில் நிலக்கடலை உற்பத்தி அதிகரித்துக் கொண்டு செல்கின்றன மாறாக சோளன் உற்பத்தி குறைவடைந்து கொண்டு செல்கின்றன. இவற்றுக்கு காட்டுயானைகளின் பிரச்சனைகள்தான் அதிகமாகவுள்ளன. மாவட்டத்தில் கடந்த வருடம் 750 ஏக்கரில் செய்கைபண்ணப்பட்டு வந்த நிலக்கடலை இவ்வருடம் 1125 ஏக்கரிலும், கடந்த வருடம் 1400 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்டு வந்த சோளன் செய்கை 700 ஏக்கரிலும் செய்கை பண்ணப்பட்டுக் குறைவடைந்துள்ளது. இருந்த போதிலும் வெல்லாவெளிப் பகுதியில் சோளன் செய்கை அதிகரித்துக் கொண்டும், ஏனைய பிரதேசங்களில் நிலக்கடலைச் செய்கை அதிகரித்துக் கொண்டும் செல்கின்றன. 

விவசாயிகளுக்கு எமது விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்படும் சோளன் விதைகள் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். இது உற்பத்தி செய்து மீண்டும் இதன் விதைகளை நடுகைக்குப் பயன்படுத்த முடியாது. ஒரு ஏக்கரில் சோளம் செய்தால் 110000 ரூபா கிடைக்கும். 

சோளன் செய்கை உள்ளிட்ட மேட்டுநிலப் பயிர் செய்கைகளை ஊக்குவிப்பதற்காக வேண்டி வெ;லாவெளிப் பிரதேசத்தில் கடந்தவருடம் 30 விவசாயக் கிணறுகள் வழங்கப்பட்டுள்ளன. கௌப்பி, உழுந்து, பயறு, சோளன், நிலக்கடலை,  சோயா, ஆகிய உற்பத்திகளை அதிகரித்து வெளிநாட்டிலிருந்து வரும் இறக்குமதிகளைக் குறைக்க வேண்டும். இதுதான் அரசாங்கத்தின் நிலப்பாடுமாகும். எனவே நாம் வெளிநாடுகளில் தங்கியிருக்காமல் எமது உற்பத்திகளையும் அதிகரிக்க வேண்டும். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 160000 நெற்காணிகள் உள்ளன, இதில் 52000 ஏக்கல் வயல் நிலம்தான் இரண்டு போகங்களும் நெற்செய்கை பண்ணக்கூடிய காணிகளாகும், மீதமாகவுள்ள 108000 ஏக்கர் காணிகள் 8 மாதங்கள் எதுவித பயிரும் செய்யாமல் கிடக்கின்றன. அக்காலப்பகுதியில் அதில் நிலக்கடலை, சோளன் உள்ளிட்ட பயிர்களை நடலாம் ஆனால் விவசாயிகள் அதில் ஈடுபடுவதில்லை, என அவர் இதன்போது தெரிவித்தார்.























SHARE

Author: verified_user

0 Comments: