மட்டு அரசாங்க அதிபருக்கு ஸ்ரீ காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தினால் கௌரவிப்பு வழங்கப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபராக கடமையினைப் பொறுப்பேற்ற மாணிக்கம் உதயகுமார் மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தின் நிருவாகத்தினரால் திங்கட்கிழமை (01) இரவு ஆலயத்தில் நடைபெற்ற பௌர்ணமி தினவிசேடபூசையின் போது பொன்னாடை போர்த்திகௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கு அம்பாளின் திருவுருவப்படமும் நினைவுச் சின்னமாகவழங்கப்பட்டது.
குறித்த கௌரவிப்புநிகழ்வில் ஆலய பிரதம குரு அரவிந்தன் குருக்கள் அறங்காவலர் சீவரெட்ணம் முகுந்தன் முகாமையாளர் என் நித்தியானந்தம் உட்பட மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment