4 Jan 2018

ஏழு தசாப்த காலமாக நாம் இன்னல் வாழ்கைக்கையை வாழுகின்றோம்.

SHARE
கடந்தகாலங்களில் எமது உரிமை மறுக்கப்பட்டு கிட்டத்தட்ட ஏழு தசாப்த காலமாக நாம் இன்னல் வாழ்கைக்கையை வாழுகின்றோம் அந்த இன்னல்கள் களைந்து நல்வாழ்வு வேண்டும் என்பதற்காகவே தமிழ்தேசியகூட்ட மைப்பு தலைவர் சம்மந்தன் ஐயா இதய சுத்தியுடன் செயல்படுகிறார் என மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபை தேர்தலில் அம்பிளாந்துறை 1 ஆம் வட்டாரத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பில் வீட்டுச்சின்னத்தில் வேட்பாளரான பிரதி அதிபரும் சமூக ஆர்வலருமான செல்லையா நகுலேஷ்வரன் தெரிவித்தார். 
அம்பிளாந்துறையில் தனது இல்லத்தில்  வியாழக் கிழமை (04) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்;து தெரிவிக்கையில்…..

பல வருடங்களுக்குப்பின் இந்த உள்ளூராட்சி தேர்தல் வட்டார முறையிலும் கலப்பு முறையிலும் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. எமது ஊரில் இருந்து எமது இலங்கைதமிழரசு கட்சியூடாக நானும் சகோதரர் குமாரசிங்கம் வீரசிங்கம் ஆகிய இருவரும் வீட்டுச்சின்னத்தில் இணைந்து வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளோம் அம்பிளாந்துறையில் 1 ஆம் வட்டாரத்தில் 1911 இவாக்குகள் உள்ளன அத்தனை வாக்குகளையும் சிதறடிக்காமல் தமிழர் என்ற உணர்வுடன் அனைவரும் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் நாம் இருவரும் இணைந்து எமது பிரதேசம் எமது ஊர் அபிவிருத்திகளை ஒற்றுமையாக முன்னெடுப்போம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 

பிரதேசசபை தேர்தல் பிரதேச அபிவிருத்தியை இலக்காக கொண்டாலும் அதில் போட்டியிடும் தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது கடந்த காலத்தில் வடகிழக்கு மக்களின் தமிழ் இனத்தின் தலைமையாக சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியாக இன்று வளர்ந்துள்ளது. அந்த தலைமையை தொடர்ந்தும் தமிழர்களாகிய நாம் பலப்படுத்த கடமைப்பற்றுள்ளோம் ஒரு சரியான உறுதியான அரசியல் உரிமை எமக்கு கிடைக்கும்வரை எமக்காகவே பணியாற்றும் ஒரு கட்சிதான் தமிழ் தேசியகூட்டமைப்பு அதை எல்லாதேர்தல் காலத்திலும் நாம் வாக்களிப்பு மூலமாக சம்மந்தன் ஐயாவின் கரங்களை பலப்படுத்தினோம் அதுபோலவே இந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலிலும் அவரின் கரங்களை பலப்படுத்த வேண்டும். 
   
மண்முனை தென்மேற்கு பிரதேசசபை மட்டுமின்றி மட்டக்களப்பு மாநகரசபை உட்பட ஒன்பது சபைகளையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பு இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் கைப்பற்றும் அதில் எந்த சந்தேகங்களும் இல்லை தமிழர்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு மட்டுமே வாக்களிப்பது எமது தனித்துவ அடையாளங்களை எமது மண்ணில் பாதுக்க முடியும் அபிவிருத்தியும் அபிலாஷையும் சமாந்திரமாக வென்றெடுக்கும் தேர்தலாக இந்த உள்ளூராட்சி சபைத்தேர்தல் உள்ளது என்றும் அம்பிளாந்துறை தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: