முஸ்லிம் காங்கிரஸினுடைய போராட்டம் என்பது இந்த சமூகத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டமாகவே என்றும் செயலாற்றி வந்தள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை 28.01.2018 இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, எந்தவித நோக்கமோ குறிக்கோளோ இலக்கோ இல்லாமல் தேர்தல் காலத்தில் மட்டும் வீராவேசப் பேச்சுக்களை பேசுவதால் சமூகம் ஒரு போதும் அரசியல் விடுதலையைப் பெறப்போவதில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கென்று ஒரு இலக்கு உண்டு. அது சமூகம் சார்ந்த அரசியல் விடுதலையும் அபிவிருத்தியும் சுதந்திரமும் கொண்ட இலக்கு.
ஆகவே, தேர்தல் கால வெற்றுப் பேச்சும், வெறும் வெட்டிப் பேச்சும் பேசி இந்த சமூகத்தை இனி எவரும் ஏமாற்ற முடியாது.
நாம் இந்நாட்டு முஸ்லிம்களின் சமூக விடுதலை நோக்கிய எமது நெடும் பயணத்தில் ஏனைய சிறுபான்மை மக்களையும் இணைத்துக் கொண்டு பெரும்பான்மை சமூகத்தோடு பேரம் பேசுகின்ற சக்தியாக அணிதிரட்டுடி அதன் மூலம் அரசியல் விடுதலை பெற்ற சமூகமாக மாற்றுவதே நமது இலக்கு.
இந்த நீண்ட நெடிய இலக்கு நோக்கிய பயணத்தில் எத்தனையோ தடைகள், துரோகத்தனங்கள், நயவஞ்சகங்கள் சூழ்ந்திருந்த போதிலும் காலத்துக்கு காலம் அவற்றையும் முறியடித்து வந்திருக்கின்றோம்.
அதற்கு எமக்கு உறுதுணையாக இருந்தவர்கள் சமூகப் போராளிகளான சாதாரண மக்கள். உங்களது உறுதுணை இருந்திருக்காவிட்டால் உள்ளிருந்தே குழிபறிக்கும் நயவஞ்சகர்கள் இன்று நமது சமூகத்தை இதைவிடவும் இன்னமும் சின்னாபின்னப்படுத்தியிருப்;பார்கள்.
மறைந்த தலைவர் மர்ஹ{ம் அஷ;ரப் அவர்களை “யஹ{தி” என்று விழித்துப் பேசி, பின்னர் போக்கிடமில்லாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் சரணடைந்த காரணத்தினால் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக வந்துள்ளவர்தான் அலிஸாஹிர் மௌலானா.
இப்பொழுது மீண்டும் எதிர்க்கத் துவங்கியுள்ளார். அதேபேன்றுதான் பஷீர் சேகுதாவூத்தும் தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமைத்துவத்தையும் கடுமையாக எதிர்க்கத் துவங்கியுள்ளார்.
ஒட்டு மொத்த சமூகத்தை அழிக்கவே இவ்வாறான சந்தர்ப்பவாதிகள் காலத்திற்குக் காலம் சதித் திட்டம் தீட்டி வரலாற்றுத் துரோகங்களைச் செய்து வந்துள்ளார்கள்.
தேர்தல் வரும்போதுதான் விண்ணப்பங்களைக் கொடுத்து ஏழை மக்களின் விவரங்களைச் சேகரிக்கிறார்கள். இது ஒரு ஏமாற்று வித்தையாகும்.
சமூகக் கள நிலவரங்களை ஆய்வு செய்து அபிவிருத்திக்கான திட்டங்களைத் தீட்டுவதற்கு விவரம் சேகரிக்கும் சந்தர்ப்பமல்ல இது. இது மக்களை ஏமாற்ற அவர்கள் கையாளும் ஒரு சூழ்ச்சியே அன்றி வேறில்லை.
ஆனால் சமூக விடுதலைக்கான எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு போதும் இவ்வாறான சந்தர்ப்பவாத ஏமாற்று வித்தைகளைச் செய்யாது.
இப்படிப்பட்ட கீழ்த்தரமான அறிவீனமாக மக்களை ஏமாற்றும் வேலைகளை ஒரு பொறுப்புவாய்ந்த வகைப் பொறுப்பு சொல்லக் கூடிய கட்சி என்ற ரீதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் வருகின்றபோது மட்டும் மக்களிடம் போலியான ஏமாற்று வேலைகளில் ஈடுபடாது.
நாட்டிற்கு எமது சமூகத்தின் அரசியல் பலத்தைக் காட்டி சம உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.
அந்த நோக்கத்தில் எந்தவித மாற்றமுமில்லை. நாட்டிலே வரப்போகின்ற அரசியல் மறுசீரமைப்பில் முஸ்லிம் காங்கிரஸ் காத்திரமான அரசியல் அதிகார சக்தியாக இருந்து இந்த சமூகத்திற்கு முழுமையான அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்காக மக்கள் என்றும் எம்முடன் இருப்பார்கள்.” என்றார்.
0 Comments:
Post a Comment