தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை ஒன்று தேவை அதனை உருவாக்கி இஸ்த்திரதப் படுத்துவதற்கு எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலை உரியவகையில் பயன்படுத்த வேண்டும். என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளரும் , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கான தலைமை வேட்பாளருமான தியாகராஜா தேவறஞ்சன் தெரிவித்துள்ளார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் போட்டியிடும் அமிர்தலிங்கம் கமலரக்சனை ஆதரித்து வியாழக் கிழமை இரவு (25) களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற கூட்டத்தின்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்……
எமது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக் கட்சி தையல் இயந்திரம் சின்னத்தில் இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றது. தமிழ் மக்கள் அனைவரும் எமது கட்சியின் கீழ் ஒன்றிணைந்து தையல் இயந்திரச் சினத்திற்கு வாக்களித்து எமது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும்.
தமிழ் மக்ளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இதுவரையில் இருந்த வந்த எந்த வித அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க முன்வந்திருக்கவில்லை. இந்நிலையில் எமது கட்சியின் தலைவர வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆயுதப் போராட்டங்களையும், அகிம்சைப் போராட்டங்கைளயும் நன்கு அறிந்தவர். அவர் கடந்த காலத்தில் பிரதியமைச்சராக இருந்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் பல அத்தியாவசிய மற்றும் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளார். தற்போது அவருடன் சேர்ந்து தமிழ் கட்சியை அமைத்துத்தான் நாம் இத்தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.
அடிப்படையிலிருக்கின்ற உள்ளுராட்சி மன்ற அதிகாரங்களை நாம் கையிலெடுத்து தமிழ் மக்கள் வாழும் அனைத்துப் பிரதேசங்களையும், சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டும். அபிவிருத்திக்கு மாத்திரமின்றி, அதிகாரங்களையும் கட்டியெழுப்பப்படும் இடம்தான் உள்ளுராட்சி மன்றங்களாகும். எனவே கடந்த காலங்களில் வாக்களிப்பில் விட்ட தவறுகளைப் போன்று இத்தேர்தலிலும் எமது மக்கள் அதனை விடாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அதுவும் எமது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் தையல் இயந்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
எமது தமிழ் மக்கள் இதுவரை காலமும் வாக்களித்து, வாக்களித்து, ஏமார்ந்து போனதுதான் மிச்சம், ஆனால் கண்டது எந்தப் பலனும் இல்லை. வாக்குக் கேட்பதற்கு மாத்திரம்தான் பலரும் வருவார்கள், வாக்குகளைப் பெற்று விட்டால் பின்னர் மக்களைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். இதற்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எமது மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment