நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இம்முறை 238 பேர் தெரிவுயப்படவுள்ளது. இதற்காகவேண்டி 2746 பேர் போட்டியிடுவதாக மாவட்ட தேர்தல் செயலககத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 81 வேட்பு மனுக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன, இதில் 79 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 2 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இம்மாவட்டத்திலுள்ள 144 வட்டாரத்திலிருந்து 146 போரும், விகிதாசார முறையில் 92 பேருமாக மொத்தம் 238 போர் இந்த தேர்தலில் தெரிவு செய்யப்படவுள்ளனர். இம்மாவட்டத்தில் 457 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்புகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் இம்மாவட்டத்திலிருந்து 238 போரைத் தெரிவு செய்வதற்காக வேண்டி 2746 பேர் போட்டியிடுகின்றனர். நடைபெறவுள்ள இத்தேர்தலில் மட்டக்களப்பு மவாட்டத்தில் அதிகளவு பெண்கள் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment