மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் ஆவியா – 02 எனும் குறும் திரைப்படம் சனிக்கிழமை (13) மாலை களுதாவளை கலாசார மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
களுதாவளை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ரமணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் ஏ.வேலாயும், முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன், தொழிலதிபர் சைவப்புலவர் வி.இரஞ்சிதமூர்த்தி, உதவிக் கல்விப்பாளர் எஸ்.வன்னியசிங்கம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெளியீட்டு வைத்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன்……
திரைப்படத் துறைக்கு மட்டக்களப்பு பின்வாங்குகின்ற நகரமல்ல, இலங்கையில் வெளிவந்த நிர்மலா ஏனும் படத்தில் தங்கவடிவேல் அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார். பின்னர் கறுப்பு வெள்ளை பொக்ஸ் கமராவில் மூத்த எழுத்தாளர் அமரர் நாகலிங்கம் அன்புமனியினால் பிட்டுக்கு மண்சுமந்த கதை என்ற படம் எடுக்கப்பட்டது. அதிலும் நம்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்தான் நடித்திருந்தார்கள்.
1970 களில் பூப்புனித நீராட்டுக்களுக்காக கமர தூக்கப்பட்டன, 1980 களில் இவ்வாறான குறும்படங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன. அது தொடர்ந்து எமது பிரதேசத்திற்கும் அடியெடுத்திருந்தது. அதன் ஒரு அம்சமாகத்தான் ஆவியா எனும் குறுந்திரைப்படமும் வெளிவந்துள்ளது எனலாம்.
கலைஞர்கள்தான் இந்த நாட்டை ஆள்கின்றான் என்ற செய்தியை தமிழகம் சொல்கின்றது. எனவே ஆவியா குறும் திரைப்படக் குழுவினர் அவர்களின் இதே செயற்பாடுகளை முன்னெடுத்தால் அவர்களும் என்றோ ஒருநாள் இந்த நாட்டை ஆளுகின்ற தகுதியைப் பெற்றுக் கொள்வர்கள். என அவர் தெரிவித்தார்.
களுதாவளை கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆவியா – 1 என்ற குறுந்திரைப்படம் வெளியீட்டு வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆவியா – 2 என்ற குறுந்திரைப்படம் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment