31 Dec 2017

தேர்தல் சட்டதிட்டங்கள் தொடர்பில் வேட்பாளர்களுக்குத் தெழிவு படுத்தும் நிகழ்வு.

SHARE
உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பான சட்டதிட்டங்கள் தொடர்பில் வேட்பாளர்களுக்குத் தெழிவுபடுத்தும் நிகழ்வொன்று வெள்ளிக்கிழமை (29) மாலை மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி சீ.மூ.இராசாமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
களுவாஞ்சிகுடிப் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் ஏற்பட்டில், நடைபெற்ற இந்நிகழ்வில், பட்டிருப்புத் தொகுதியினை மையப்படுத்தி உள்ளுட்சி மன்றங்களில் போட்டியிடும், பல கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட  பலரும், இதில் காலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது களுவாஞ்சிகுடிப் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், எல்.ஆர்.குமாரசிறி, களுவாஞ்சிகுடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உப்புல் குணவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு விளக்கங்களை வழங்கினர்.

சமாதான முறையில் எதுவித பிரச்சனைகளுமின்றி இந்த தேர்தல் நடைபெறுவதற்கு வேட்பாளர்களது ஒத்துழைப்புக்கள் அவசியம், ஒரு நபரின் வீட்டில் குழுவாக சிறிய கூட்டம் ஒன்று வைப்பதாயின் அந்த வீட்டு உரிமையாளர் சம்மதத் கடிதம் தரவேண்டும், ஒரு பிரதேசத்திற்குரிய காரியாலயமாக ஒரு கட்சிக்கு ஒரு காரியாலயம் மாத்திரமே அப்பிரதேசத்தில் அமைக்க முடியும், அதற்குரிய அனுமதியையும் தேர்தல் செயலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும். வீதிகளைக் குறுக்கீடு செய்து கொடிகள் மற்றும், வெனர்கள் கட்டக்கூடாது, சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுபோருக்கு கட்சி பேதங்கள பாராமல் முறையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நீதியான ஊழலற்ற தேர்தலை நடாத்தி முடிக்க வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு, அதற்கு வேட்பாளர்களின் ஒத்துழைப்புக்கள் மிகவும் அவசியமாகும், இதற்கு மேலாக தேர்தலில் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் அந்த பிரதேசத்தின் தேர்தல் இரத்துச் செய்யப்படும். எனவே இதுவரைக்கும் எந்தக் கட்சி பேதமுமின்றி எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல் அனைத்து வேட்பாளர்களும் செயற்படுவது போன்று தேல்தல் முடியும் வரைக்கும், எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல் கொண்டு செல்லப்பட வேண்டும். உள்ளிட்ட பல விளக்கங்கள் பொலிசாரால் இதன்போது வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.












SHARE

Author: verified_user

0 Comments: