கிழக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒக்கீட்டின் ஊடாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட வேலையற்ற இழைஞர் யுவதிகளுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சி நெறியை முடித்துக் கொண்ட 130 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் தலைமையில் தம்பிலூவில் மத்திய மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.டபிள்யு.ஜீ.திசாநாயக்கா, மற்றும் திருக்கோவில் கல்வி வலய பிரதிகல்வி பணிப்பாளர் முகாமைத்துவம் செல்வி என்.வரணியா, பிரதிகல்வி பணிப்பாளர் திட்டமிடல் திருமதி.ரீ.ராஜசேகர், மற்றும் கோட்டக்ல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்
0 Comments:
Post a Comment