எமது வளங்களைப் பிறருக்குத் தரை வார்த்துக் கொடுக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எமது பிரதேசத்தில் தேங்கிக் கிடக்கின்ற வளங்களை பயன்பாட்டுக்கக் கொண்டு வந்து அவற்றினூடாக எமது மக்கள் அதி உச்ச நன்மையடையக் கூடிய அளவிற்கு மாற்ற வேண்டும். இவற்றுக்கெல்லாம் முறையான ஒரு உள்ளுராட்சிமன்றக் கட்டமைப்புத் தேவை. முறையான உள்ளுராட்சி மன்றத்தை உருவாக்கும் பொறுப்பு தற்போது எமது பிரதேச மக்களின் கையில் வழங்கப்பட்டுள்ளது.
என உள்ளுராடசிமன்றத் தேர்தலில் களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மேகசுந்தரம் வினோராஜ் (வினோ) தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
உள்ளுராடசி மன்றம் என்பது உள்ளுர் அபிவிருத்தியை மையமாகக் கொண்டு செயற்படுவதற்காக அமைக்கப்பட்ட ஓர் கட்டமைப்பாகும். இதனை இயக்குவதற்கு தேசிய அரசியல் கட்சிகளிலிருந்து இங்கு வந்து யாரும் செயற்பட வேண்டிய அவசியமில்லை. அதற்காகத்தான் எமது மக்களால் மிக நீண்ட காலமாகவிருந்து கட்டியெழுப்பப் பட்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சி உள்ளது. எனவே நமது பிரதேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை மாத்திரம் எமது மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
உள்ளுராட்சித் தேர்தலை மக்கள் முன் வைத்து தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாகக் காணப்படுபவர்கள் எமது மக்களைத் திசைதிருப்பப் பார்க்கின்றார்கள். எமது மக்கள் அவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு கட்டுப்படமாட்டார்கள், உள்ளுராட்சி மன்றத்தினூடாக மேற்கொள்ளப்படும் அபிவிருதிகளை மேற்கொள்வதற்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் அதனை மேற்கொள்ளலாம். அதற்கு பேரினவாதக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் தான் ஆட்சிக்கு வரவேண்டியதில்லை. காலாகாலமாக எமது மக்களின் அடிமட்டப் பிரச்சனைகள் தொடக்கம் அரசியல் பிரச்சனைகள் வரைக்கும் உடனுக்குடன் கரிசனை செலுத்திக் கொண்டிருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே. எனவே இதுவரைகாலமும் தமிழ் தேசியத்திற்கு ஆரதவு தெரிவித்து வந்ததுபோல் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் அனைவரும் ஒன்றிணைந்து வீட்டுச் சின்னத்திற்கு மாத்திரம் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment