2 Dec 2017

வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி போதைப்பொருள் பாவணைக்கு செலவு செய்யப்படுகின்றது

SHARE
வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி போதைப்பொருள் பாவணைக்கு செலவு செய்யப்படுகின்றது. இது நூற்றுக்கு 33 வீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவணையை நாட்டிலே முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் முதலில் பாடசாலை மாணவர்களுக்கு நல்ல அறிவுறுத்தல்கள்இ வழிகாட்டல்கள் வழங்கப்பட்டு அவர்கள் மூலம் அவர்களின் தந்தைஇ சகோதர்கள்இ உறவினர்களை போதையில் இருந்து மீட்க முடியும் என மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார்.  
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்குழு பொறுப்பாசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வில் தலைமை தாங்கி பேசுகையில் மேலுள்ளவாறு தெரிவித்தார். இந்நிகழ்வு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் வெள்ளிக்கிழமை (01) நடைபெற்றது.

அவர் மேலும் பேசுகையில்  ஒவ்வொரு பாடசாலைகளிலும் முறையாக பேண்தகு அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக உணவுப் பழக்கம்இ சூழல் முகாமைத்துவம்இ சிறுவர் பாதுகாப்பும் துஸ்பிரயோகமும்இ போதைவஸ்து பாவனைஇ நஞ்சற்ற உணவுகள் ஆகிய ஐந்தையும் முறையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் மனிதன் ஆரோக்கியமான முறையில் வாழ முடியும். இவற்றை ஒவ்வொரு பாடசாலைகளும் வினைத்திறனுடனும்இ சவாலாகவும் எடுத்து நாட்டை சுபீட்சமிக்கதாக கட்டியெழுப்ப வேண்டும். நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு கல்வியூடாக இவற்றை கல்வி அமைச்சு முன்னெடுத்து வருகின்றது. இதனை ஒவ்வொரு அதிபர்களும் பாடசாலையில் நடைமுறைப்படுத்தி ஆசிரியர்களூடாக பேண்தகு அபிவிருத்தியை மாணவர்களுக்கு தெளிவூட்டும்போது இந்தநாட்டையும்இ கல்விச்சமூகத்தையும் வளம்கொளிக்கச் செய்யலாம்.

மாற்றம் என்பது முதலில் ஒவ்வொரு ஆசிரியர்களிலிடமிருந்தும்இ அவர்களின் உடம்பிலும்இ எண்ணத்திலும் வரவேண்டும். ஒவ்வொரு ஆசிரியர்களும் பேண்தகு அபிவிருத்தியை பாடசாலையில் ஆக்கபூர்வமாக முன்னெடுத்து மாணவர்களூடாக நல்ல விளைச்சலை அறுவடை செய்ய வேண்டும். இதுதான் கல்வியின் இன்றைய எதிர்பார்ப்பாகவிருகின்றது. போதைப்பொருள் பல்வேறு வடிவங்களில் வருகின்றது. இது சம்பந்தமாக  ஒவ்வொரு ஆசிரியர்களும் போதைப்பொருட்களை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் நோய்களுக்கு அரச வைத்தியசாலைகளிலில் அரசாங்க செலவுத்தொகையாக 22 வீதம் செலவு செய்யப்படுகின்றது.

அதுமட்டுமல்லாமல் போதைப்பொருள் பாவனையால் அதிக நோய்கள் மனிதனை விரைவாக தேடிப்பிடிக்கின்றது. மேலும் முறையான உணவு பழக்கமுறை மனிதர்களிடையே இல்லாமல்  காணப்படுகின்றது. இதனால் தொற்றாநோய்கள் மனிதனுக்கு அதிகரித்து காணப்படுகின்றது.

1978ஆம் ஆண்டுக்கு முன்னர் மனிதன் தனது நெற்றி வியர்வை சிந்தி  தனது வீட்டுத்தோட்டத்தில் நஞ்சற்ற உணவைப்பெற்றான்.அன்று மனிதனை நோய் தொற்றிய வீதம் குறைவு. ஆனால் இன்று நஞ்சற்ற உணவை சாப்பிட்டு நோயாளியாக மாறியுள்ளான்.எனவே பேண்தகு அபிவிருத்தியை முறையாக நடைமுறைப்படுத்தி ஆரோக்கிய சமூகமாக வாழ்வோம் எனத்தெரிவித்தார். 












SHARE

Author: verified_user

0 Comments: