2 Dec 2017

அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு விஜயம்.

SHARE
அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் பிறைஸ் குட்ச்சன் (Bryce Hutchesson-High Commissioner-Australia) அவர்கள் மற்றும் பிரதானிகள் வெள்ளிக்கிழமை (01)  மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது உயர்ஸ்தானிகர் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் DFEAT (Department of Foreign Affairs and Trade) நிதி உதவியுடன் ஒக்ஸ்பாம் நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படும் “கிராமப்புற விவசாய தொழில்துறை சமூக நிறுவனங்களை முன்னேற்றுவதும் நிலைத்து நிற்பதற்குமான திட்டத்தின் கீழ் (SUNRISE) கைத்தறி துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் பெண் முயற்சியாளர்களை சந்தித்து பயனாளிகளின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடினார்.

மேலும் பயனாளிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திகளையும் பார்வையிட்டு அறிந்து கெண்டார்.





SHARE

Author: verified_user

0 Comments: