பெண்கள் நினைத்தால் மதுவை அழித்து வறுமையை ஒளிக்கலாம். மதுவை முற்றாக அழித்து விடாவிட்டாலும், பெண்கள் நினைத்தால் அதனைக் குறைப்பதற்கு ஏற்ற விடையங்களை மேற்கொள்ள முடியும். பெண்கள் சகல விடையங்கிளிலும் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் இலங்கையில் குறிப்பிட்ட அளவு பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார். மேற்படி முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் மண்முனை தென்எருவில் பற்று ( களுவாஞ்சிகுடி) பிரதேசத்திலிருந்து தெரிவிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டின் கீழுள்ளவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஓந்தாச்சிமடம் சமூக பராமரிப்பு நிலையத்தில் சமூகசேவை உத்தியோகஸ்த்தர் சி.சிவகுமார் தலைமையில் வெள்ளிக் கிழமை பிற்பகல் (01) நடைபெற்றது. இதன்போதே பயனாளிகளுக்கு உதவிகளை வங்கி வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது 35 பெண்களுக்கு நவீன முறையிலான தையல் இயந்திரங்களும், 2 மீன் வியாபாரிகளுக்கு துவிச்சக்கரஎவண்டிகளும், முடிதிருத்தனர் ஒருவருக்குமுரிய சாதனங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
சமூகசேவை உத்தியோகஸ்த்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். மேற்படி முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இதில் மேலும்; தெரிவிக்கையில்….
நற்போது நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்கலுக்க வேண்டி சகல கட்சிகளும் தங்களைத் தயர் செய்து கொண்டிருக்கின்றார்கள். எனவே நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் குறைந்தது 25 வீதமாவது பெண்களைப் பிரதிநிதிகளாக நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
பெண்களை எதிர்வருகின்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கவேண்டிய கடப்பாடு உள்ளது. உதாரணமாக மண்முனை தென் எருவில் பற்றிலுள்ள 11 வட்டாரங்களில் ஏதாவது 2 வட்டாரங்களில் பெண்வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய தேவை உள்ளது. இதுபோல் இப்பிரதேசத்தில் மேற்படி தேர்தலுக்காக வேண்டி விகிதாசாரப் பட்டியலில் இடம்பெறும் வேட்பாளர்களில் 50 வீதமானோர் பெண்கள் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்கள் சளைத்தவர்களல்ல பெண்களும் ஆண்களைப்போல் அரசியலிலும் மிளிரவேண்டும். குடும்பத்தை வழிநடாத்திச் செவ்லது போன்று கிராமத்தையும், ஏனைய மக்களையும் வழிநடாத்திச் செல்கின்ற தலைவிகளாக மிளிர எமது பிரதேசத்து பெண்கள் முன்வர வேண்டும்.
எனவே எமது பிரதேச பெண்களும் அரசியலில் மிளர வேண்டும் என்பதற்காக அவர்கள் தற்போதிருந்தே அதற்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment