மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதி வைத்தியாசலைக்கு முன்னால் ஞாயிற்றுக் கிழமை (03) அதிகாலை 3 பசுமாடுகள் விபத்துக்குள்ளாகி பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளன.
ஞயிற்றுக் கிழமை அதிகாலை வேவையில் மாடுகள் மீது மோதிவிட்டுச் சென்ற வாகனம் எதுவென்று தெரியாதுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டாக்காலியாக வீதியில் நடமாடிய மாடுகளே இவ்வாறு வாகனத்தில் மோதுண்டு பரிதாபகரமான முறையில் இறந்துள்ளன.
0 Comments:
Post a Comment